கூட்டணி பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவோம்? தமிழிசை விளக்கம்

 

கூட்டணி பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவோம்? தமிழிசை விளக்கம்

கூட்டணி பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்,

சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தையை எப்போது தொடங்குவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்,

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் – மதிமுக – விசிக – இடதுசாரிகள் என பிரம்மாண்ட கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை கூட்டணி நிலவரம் என்னவென தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க முதல்வர் பழனிசாமி விரும்பவில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பதை இப்போதே சொல்வது சரியாக இருக்காது.

அடுத்த மாதம் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம். அதனால் கூட்டணி நிச்சயம் இருக்கும். திமுக -காங்கிரஸ் கூட்டணியைவிட சதவீதத்திலும், சாதனைகளிலும், மக்களை அணுகுவதிலும் எங்கள் கூட்டணி ஒரு பலமான கூட்டணியாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்றார்.