கூட்டணியால் சரியப்போகிறது அதிமுக சாம்ராஜ்ஜியம்: டிடிவி பக்கம் தாவும் சிட்டிங் எம்பிக்கள்?!

கூட்டணியால் சரியப்போகிறது அதிமுக சாம்ராஜ்ஜியம்: டிடிவி பக்கம் தாவும் சிட்டிங் எம்பிக்கள்?!

திமுக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்துள்ள வேளையில், ஆளும் அதிமுக நிலை திண்டாட்டமாக உள்ளது.பாஜக கூட்டணியால் அதிமுக தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

திமுக தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்துள்ள வேளையில், ஆளும் அதிமுக நிலை திண்டாட்டமாக உள்ளது.பாஜக கூட்டணியால் அதிமுக தரப்பில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

அதிமுகவில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும், பாஜவுக்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம். இப்படியிருக்க மீதம் அதிமுகவிற்கு 20 தொகுதிகள் மட்டுமே உள்ளது. 

கடந்த தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் அதிமுகவில் 37 சிட்டிங் எம்பிக்கள் உள்ள நிலையில், அதிமுக இம்முறை 20 தொகுதிகளிலேயே போட்டியிட இருப்பதால் அவர்களில் எத்தனை பேருக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று தெரியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோதே கடுகடுத்த அதிமுக எம்பிக்கள் இதனால் அதிருப்தியில் உள்ளனர். யார் யாருக்கு சீட் கொடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளது அதிமுக தரப்பு, பாஜக கூட்டணியால் கடுப்பில் உள்ள எம்பிக்கள் இதனால் டிடிவி தினகரன் பக்கம் சாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரனின் பாஜக எதிர்ப்பு இவர்களை ஒன்றிணைக்கும் என தெரிகிறது. அதுவுமில்லாமல் ஜெயித்தவர்களை உட்கார வைத்துவிட்டு தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு 5 சீட் கொடுத்தால் சும்மா இருப்பார்களா?!…