கூட்டணிக்கு வேட்டு வைத்த பாமக… அலறித் துடிக்கும் அதிமுக..!

 

கூட்டணிக்கு வேட்டு வைத்த பாமக… அலறித் துடிக்கும் அதிமுக..!

ஜெயலலிதா பாணியில் தனித்தே போட்டியிட்டிருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது எப்படி இந்த எதிர்ப்புகளை எல்லாம் நாங்க சமாளிக்க போகிறோமோ? இதெல்லாம் நமக்கு தேவையா என்று ஆற்காடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மக்களவை தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைத்தது உள்ளாட்சித் தேர்தலில் வேட்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.

இந்தத் தேர்தலில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது அதிமுக. ஆனால் பிரச்சாரத்தின் போது இந்தக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதல், உள்குத்து எல்லாம் இப்போது தான் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கூட்டணிக்கே வேட்டு வைக்க ஆரம்பித்துள்ளது. ராமதாஸ்

ஆகையால் கூட்டணி இன்றி தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என அதிமுக நிர்வாகிகள் சிலரும் தொண்டர்களும் புலம்பி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுகவினர் தேர்தலுக்கு முன்னர் உற்சாகத்தில் இருந்தனர். அங்கு அதிமுக சிட்டிங் எம்பி அரிக்கோ, அதிமுகவினருக்கோ அரக்கோணம் தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கூட்டணிக் கட்சியான  பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்திக்கு அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தது அதிமுக. ராமதாஸ்

ஒருமுறை பாமக கூட்டணியில் சேர்ந்தபோது, அரக்கோணம் தொகுதியில் பாமகவிற்கு தேர்தல் பணியில் முழுமூச்சாக வேலை செய்தும், தேர்தலில் தோற்று போனவுடன், அதிமுக தான் தோல்விக்கு காரணம் என்று பாமகவினர் அந்தர்பல்டி அடித்தனர். 

இந்நிலையில் தற்போது நடந்த மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆற்காடு நகரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அப்போது வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் உறவினர் மற்றும் நண்பர்களே பட்டுவாடா செய்துள்ளனர். கூட்டணி கட்சியை நம்பாமல், பாமகவினரே பணத்தை பட்டுவாடா செய்ததால், அதிமுகவினர் தேர்தல் முடிந்தும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  ராமதாஸ்

இப்படி கூட்டணி கட்சியையே நம்பாதவர்களுடன் கூட்டு வைக்காமல், ஜெயலலிதா பாணியில் தனித்தே போட்டியிட்டிருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது எப்படி இந்த எதிர்ப்புகளை எல்லாம் நாங்க சமாளிக்க போகிறோமோ? இதெல்லாம் நமக்கு தேவையா என்று ஆற்காடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.