கூடுதல் வட்டி கேட்ட அடகு நிறுவனம்… நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

 

கூடுதல் வட்டி கேட்ட அடகு நிறுவனம்… நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி கூடுதல் வட்டி வசூலிக்கும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலணியைச் சேர்ந்தவர் வேதநாயகம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி கூடுதல் வட்டி வசூலிக்கும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலணியைச் சேர்ந்தவர் வேதநாயகம். இவர் வடசேரி பகுதியில் உள்ள அடகு நிறுவனம் ஒன்றில் ரூ.7 லட்சத்துக்கு நகைக்கடன் பெற்றிருந்தார். நகைகளைத் திருப்பத் திட்டமிட்ட நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அடகு நிறுவனம் மூடப்பட்டதால் நகையை திருப்ப முடியவில்லை. இது தொடர்பாக அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது ஊரடங்கு முடிந்த பிறகு நகை திருப்பிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

CRIME-23

இந்த நிலையில் ஊரடங்கு நீடித்தாலும் தனிக்கடைகள் திறக்கலாம் என்று அரசு அறிவித்ததால் கடந்த திங்கட்கிழமை தனியார் அடகு நிறுவனமும் செயல்படத் தொடங்கியது. தன்னுடைய நகையை மீட்க சென்ற வேதநாயகத்திடம் வட்டி 59 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஊரடங்கு காரணமாக நிறுவனத்தை மூடி வைத்துவிட்டு, அநியாயமாக வட்டி வாங்குகின்றீர்களே, நியாயப்படி வட்டி வசூலிப்பதாக இருந்தாலும் ரூ.25 ஆயிரம் தானே வர வேண்டும் என்று கேட்டுள்ளார். கடந்த மாதம் வட்டி செலுத்தாததால் அபராதம், கூடுதல் வட்டி வந்துள்ளது என்று கூறியுள்ளனர். 
அரசு உத்தரவை மீறி கூடுதல் வட்டி வசூலிக்கும் தனியார் அடகு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் செய்துள்ளார்.