கூடலூரில் ஆறு மாதமாக ஆட்டகாசம் செய்யும் புலி… மனிதர்களை கொல்லும்முன் பிடிக்கக் கோரிக்கை!

 

கூடலூரில் ஆறு மாதமாக ஆட்டகாசம் செய்யும் புலி… மனிதர்களை கொல்லும்முன் பிடிக்கக் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஶ்ரீமதுரை பகுதியில் புத்தூர்வயல், மண்வயல், கம்மாத்தி, கிளச்செல்லூர் போன்ற பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக புலி ஒன்று நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.

ஊட்டியில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை புலி ஒன்று வேட்டையாடி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஶ்ரீமதுரை பகுதியில் புத்தூர்வயல், மண்வயல், கம்மாத்தி, கிளச்செல்லூர் போன்ற பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக புலி ஒன்று நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி வனத்துறையினருக்குப் பலமுறை புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

gudalur-78

இந்த புலி கிராமங்களுக்குள் புகுந்து மக்கள் வளர்த்து வரும் பசு, ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொன்று பசியாறி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு அம்பலமூல பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான கொட்டகைக்குள் நுழைந்த புலி கறவை மாட்டை அடித்துக் கொன்றுள்ளது. 
புலி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும் மக்கள், ஆடு மாடுகளை வேட்டையாடி வரும் புலி, மனிதர்களை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். எனவே, மனிதர்களை தாக்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக அந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தள்ளனர்.