கூடங்குளத்துக்கு மட்டும் 1.2 லட்சம் கோடி… தேவையற்ற செலவுகளை நிறுத்த சுற்றச்சூழல் ஆர்வலர் வலியுறுத்தல் 

கூடங்குளத்துக்கு மட்டும் 1.2 லட்சம் கோடி… தேவையற்ற செலவுகளை நிறுத்த சுற்றச்சூழல் ஆர்வலர் வலியுறுத்தல் 

இந்திய அரசு தன்னுடைய அத்தியாவசிய தேவையில்லாத செலவுகளை தற்போதைக்கு நிறுத்தினாலே பல லட்சம் கோடிகளைத் திரட்ட முடியும் என்று சமூக, சுற்றச்சூழல் ஆர்வலர் பூ உலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்க இருக்கும் எஸ்-400 விமான/ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பின் விலை 4,00,000 கோடி. ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா செலவழிக்க இருக்கும் தொகை 60,000 கோடி. அப்பாச்சி வகை ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியா செலவழிக்க இருக்கும் தொகை 2.25 லட்சம் கோடி.

kudankulam

கூடங்குளம் அணு மின் நிலையங்கள் 3, 4, 5, 6 என நான்கு உலைகளை அமைக்க இந்திய அரசு செலவழிக்கப்போகும் தொகை 1.2 லட்சம் கோடி. இதைத்தவிர இன்னும் நிறையத் தேவையற்ற செலவுகள் உள்ளன, இவற்றையெல்லாம் நிறுத்தாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் கைவைத்தது அராஜகம்.
கொரோனா தொடர்பான விஷயங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய நிதியிலிருந்து 50% அல்லது கூடுதலாக செலவழிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.