கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் நிறுவனங்களுடன் உள்துறை அமைச்சகம் சந்திப்பு நடத்த ஏற்பாடு – காரணம் உள்ளே!

 

கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் நிறுவனங்களுடன் உள்துறை அமைச்சகம் சந்திப்பு நடத்த ஏற்பாடு – காரணம் உள்ளே!

கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் நிறுவனங்களுடன் உள்துறை அமைச்சகம் சந்திப்பு நடத்த ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லி: கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் நிறுவனங்களுடன் உள்துறை அமைச்சகம் சந்திப்பு நடத்த ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிறுவர் ஆபாச படங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் படங்கள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து பெரிய இணைய நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதளங்களுடன் உள்துறை அமைச்சகம் சந்திப்பு நடத்தவிருப்பதாக உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுடன் சந்தித்து பேச உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

ttn

ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரஜ்வாலா, கடந்த 2015-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கடிதத்தையும், இரண்டு கற்பழிப்பு வீடியோக்களையும் பென்-டிரைவில் அனுப்பியதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்தே இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது. ஆனால், ஆபாச உள்ளடக்கம் கொண்ட புகைப்படங்களோ, வீடியோக்களோ பரப்பியது தொடர்பாக புகார் அளிக்கப்படும்போது, சம்மந்தப்பட்ட சாதனத்தில் அல்லது தளத்தில் இருந்து மட்டுமே அந்த உள்ளடக்கம் அகற்றப்படும். வேறு சில இடங்களில் அதன் பிரதிகள் இருந்தால் அவை நீக்கப்படாது என்று கூறப்படுகிறது.