கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை அடித்த திருடன்: காவல்துறை அதிர்ச்சி; எப்படி தெரியுமா?

 

கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை அடித்த திருடன்: காவல்துறை அதிர்ச்சி; எப்படி தெரியுமா?

கொள்ளையன் ஒருவன் கூகுள் மேப் வைத்து பணக்காரர்கள் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விசாகப்பட்டினம்: கொள்ளையன் ஒருவன் கூகுள் மேப் வைத்து பணக்காரர்கள் வீட்டில் கொள்ளையடித்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் செல்லும் மாநிலங்களில், பணக்கார ஏரியா எது என கூகுளில் தேடிய சத்ய ரெட்டி என்பவர், அந்த இடத்தை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்து பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.அதன்படி  சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கொள்ளையன் சத்ய ரெட்டி மீது நாடு முழுவதும் 52 வழக்குகள் உள்ளன. 

நுங்கம்பாக்கம் அப்பல்லோ டாக்டர் வீட்டில் ரூ.1 கோடி, நகை மற்றும் தேனாம்பேட்டை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட 4 இடங்களில் நடந்த கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர்  சென்னையில் நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், தேனாம்பேட்டை பகுதிகள் பணக்கார ஏரியா என காட்டியதால், கூகுள் மேப் உதவியுடன் அப்பகுதிக்குச் சென்று கொள்ளை அடித்துள்ளார். பல நாட்களாக போலீசிடம் சிக்காமல் இருந்த கொள்ளையனை விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்துள்ளனர். 

இதையடுத்து நுங்கப்பாக்கம் காவல் உதவி ஆணையர் ஏ.சி முத்துப்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாகப்பட்டினம் சென்று பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இருந்து 120 சவரன் நகையை போலீசார் மீட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.