கூகுள் பிளே-ஸ்டோரில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்து வாட்ஸ்ஆப் சாதனை!

 

கூகுள் பிளே-ஸ்டோரில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்து வாட்ஸ்ஆப் சாதனை!

கூகுள் பிளே-ஸ்டோரில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்து வாட்ஸ்ஆப் சாதனை படைத்துள்ளது.

கலிபோர்னியா: கூகுள் பிளே-ஸ்டோரில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்து வாட்ஸ்ஆப் சாதனை படைத்துள்ளது.

உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் மொபைல் ஆப்-ஆக வாட்ஸ்ஆப் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. மாதம்தோறும் சுமார் 1.6 பில்லியன் பயனர்கள் ஆக்டிவாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் பேஸ்புக் மெசஞ்சர் 1.3 பில்லியன் பயனர்களுடனும், வி சாட் 1.1 பில்லியன் பயனர்களுடனும் அடுத்தடுத்த இடத்தை வகிக்கிறார்கள். மேலும் பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆப்களுக்கு அடுத்து வாட்ஸ்ஆப் தான் மிகவும் பிரபலமான ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஆகும்.

கூகுள் பிளே-ஸ்டாரின் தற்போதைய நிலவரப்படி உலகளவில் வாட்ஸ்ஆப்பின் மார்கெட் தென்கொரியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. கடந்தாண்டு அந்நாட்டில் 56 சதவீதம் அளவுக்கு மொபைல் மெசேஜிங் ஆப் டவுன்லோடுகள் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கூகுள் பிளே-ஸ்டோரில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்து வாட்ஸ்ஆப் சாதனை படைத்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத ஒரு மொபைல் ஆப் 500 கோடி டவுன்லோடுகளை கடப்பது இது இரண்டாவது முறையாகும்.

wa

முன்னதாக பேஸ்புக் ஆப் அந்த சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மட்டுமில்லாமல் அந்நிறுவனத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய ஆப்களும் உலகளவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆப்களுக்கு கடும் போட்டி அளிக்கக் கூடிய வகையில் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான மொபைல் ஆப்கள் பிளே-ஸ்டோரில் கோலோச்சி வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.