கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மீண்டும் நீக்கப்பட்ட உளவு பார்க்கும் செயலி!

 

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மீண்டும் நீக்கப்பட்ட உளவு பார்க்கும் செயலி!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மீண்டும் ஒருமுறை உளவு பார்க்கும் செயலி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

டெல்லி: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மீண்டும் ஒருமுறை உளவு பார்க்கும் செயலி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நூற்றுக்கணக்கான தீங்கிழைக்கும் ஆப்கள் நீக்கப்படுகிறது. அந்தவகையில் இம்முறை பிரபல சாட்டிங் ஆப் டொடாக் நீக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பிளே ஸ்டோரிலிருந்து இந்த ஆப்-ஐ கூகுள் நீக்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உளவு கருவியாகக் கருதப்படும் இந்த ஆப் பிளே ஸ்டோரிலிருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் ஆப் ஸ்டோரில் இருந்து டொடாக் ஆப் அகற்றப்பட்டது. ஆனால் ஒரே மாதத்தில் இந்த ஆப் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் தலைகாட்டியது. டொடாக் ஆப்-ஐ நீக்கியதை பற்றி கூகுள் நிறுவனம் ஒத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏன் இந்த ஆப் நீக்கப்பட்டது என்பது பற்றிய காரணத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை. முதல்முறை இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த நீக்கப்பட்டபோது, சில பிளே ஸ்டோர் கொள்கைகளை இந்த ஆப் கடைபிடிக்கவில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.