கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

 

கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்கள் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

டெல்லி: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் (அக்டோபர்) 9-ஆம் தேதி நியூயார்க்கில் அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து, அக்.11-ஆம் தேதி ஃபிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் இன்று முதல் (நவ.1) இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கியுள்ளது. ஃபிளிப்கார்ட் தவிர ரிலையன்ஸ் டிஜிட்டல், ஏர்டெல் ஸ்டோர்ஸ், குரோமா, விஜய் சேல்ஸ் உள்ளிட்ட ஆஃப்லைன் ஷோரூம்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நவம்பர் 7-ஆம் தேதிக்குள் புதிய பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தங்களது பழைய பிக்சல் அல்லது நெக்சஸ் போன்களை எக்சேஞ்ச் செய்யும்போது கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக பெற முடியும். இந்த சலுகை குறிப்பிட்ட சில ஆஃப்லைன் ஷோரூம்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

google

முதற்கட்டமாக கிளியர்லி வைட் மற்றும் ஜஸ்ட் பிளாக் ஆகிய இரண்டு நிறங்கள் இவ்விரு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது. பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்பிளேவும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் குவாட் ஹெச்.டி டிஸ்பிளேவும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பிக்சல் போன்களிலும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், டூயல் 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

g pixel

இந்தியாவில் 64 ஜிபி மெமரி கொண்ட பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.71,000 என்றும், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.80,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 64 ஜிபி மெமரி கொண்ட பிக்சல் 3 XL மாடலின் விலை ரூ.83,000 என்றும், 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.92,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.