கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த புருவ அழகி பிரியா வாரியர்!

 

கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த புருவ அழகி பிரியா வாரியர்!

2018ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நட்சத்திரமாக மலையாள நடிகை புருவ அழகி பிரியா வாரியர் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படமும், நடிகர் அக்ஷய்குமார் பற்றியும் அதிகம் கூகுளில் தேடப்பட்டுள்ளது.

worldcup

2018ம் ஆண்டு கூகுள் தேடலில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான தேடல்கள் தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளன. சினிமாவை பொறுத்தவரை ஹாலிவுட் படங்களை காட்டிலும், பாலிவுட் திரைப்படங்கள் குறித்த தேடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

2point0

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ், தீபிகா படுகோன் – ரன்வீர் சிங், சோனம் கபூர்-ஆனந்த் அஹுஜா போன்ற பிரபலங்களில் திருமண நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடைபெற்றதையொட்டி, அது தொடர்பான தேடல்களும் அதிக அளவில் இடம்பெற்றன.

மேலும், கர்நாடகா தேர்தல், மத்திய பட்ஜெட், சட்டப்பிரிவு 377 நீக்கம், ஃபிபா உலகக் கோப்பை, ஐபிஎல் தொடர்பாகவும் அதிகம் தேடப்பட்டுள்ளது.