கூகுள் தேடலில் டிரெண்டான 49P: சர்கார் ரிலீசுக்கு பின் மக்கள் ஆர்வம்

 

கூகுள் தேடலில் டிரெண்டான 49P: சர்கார் ரிலீசுக்கு பின் மக்கள் ஆர்வம்

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் ரிலீசுக்கு பின், 49P என்ற தேர்தல் விதிமுறை கூகுளில் அதிகளவு தேடப்பட்டுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் ரிலீசுக்கு பின், 49P என்ற தேர்தல் விதிமுறை கூகுளில் அதிகளவு தேடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் முதல் நாள் வசூலில் ரூ.3 கோடி வரை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. தளபதி ரசிகர்கள் கொண்டாடி வரும் ‘சர்கார்’ படத்தில் பேசப்பட்டிருக்கும் கள்ள ஓட்டு தொடர்பான விஷயம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கார்ப்ரேட் நிறுவனத்தின் சிஇஓ-வான விஜய், அமெரிக்காவில் இருந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப்பதற்காக இந்தியா வருகிறார். அவரது வாக்கை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டனர். பொதுவாக கள்ள ஓட்டு போடப்பட்டால் 49P என்ற தேர்தல் விதிமுறையின்படி, அந்த நபர் மீண்டும் வாக்களிக்கலாம். ஆனால், விஜய்க்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதையடுத்து தனது கார்ப்ரேட் மூளையை பயன்படுத்தும் விஜய், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்கிறார்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள 49P என்ற தேர்தல் விதிமுறை என்பது கள்ள ஓட்டின் மூலம் தனது ஓட்டை பறிகொடுத்த ஒரு நபர், தேர்தல் ஆணைய விதிகளின் ஒன்றான 49P மூலம் மீண்டும் வாக்களிக்க உரிமையை கோர முடியும். ஆனால், இது குறித்த விவரம் பொதுமக்களில் பலருக்கு தெரியாது.

இந்நிலையில், சர்கார் திரைப்படம் ரிலீசான பிறகு ‘49P’ குறித்த அறிந்துக் கொள்ள மக்கள் ஆர்வமாக கூகுளில் தேடியுள்ளனர். வாக்களிக்கும் உரிமம் குறித்த இந்த விதி கூகுளில் அதிக அளவு தேடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் திரைப்படம் கள்ள ஓட்டு குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக கருத்துக்கள் நிலவுகின்றன