கூகுள் அசிஸ்டென்ட் இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெப் பக்கங்களை முழுமையாக வாசிக்கும்!

 

கூகுள் அசிஸ்டென்ட் இனி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெப் பக்கங்களை முழுமையாக வாசிக்கும்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெப் பக்கங்களை முழுமையாக வாசிக்கும் வகையில் கூகுள் அசிஸ்டென்ட் அப்டேட் பெற்றுள்ளது.

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெப் பக்கங்களை முழுமையாக வாசிக்கும் வகையில் கூகுள் அசிஸ்டென்ட் அப்டேட் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெப் பக்கங்களை முழுமையாக வாசிக்கும் வகையில் கூகுள் அசிஸ்டென்ட் அப்டேட் பெற்றுள்ளது. முன்னதாக தலைப்பை மட்டுமே கூகுள் அசிஸ்டென்ட் வாசித்து வந்தது. தற்போது ரீட் அலவ்டு (read aloud) என்ற அம்சம் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில் வழங்கப்பட்டு உள்ளது.

இதனால் ஏய் கூகிள், இதைப் படி” அல்லது “ஏய் கூகிள், இந்தப் பக்கத்தைப் படி” என்று சொல்வதன் மூலம் வெப் பக்கத்தின் உள்ளடக்கத்தை முழுமையாக சத்தமாக கூகுள் அசிஸ்டென்ட் வாசித்துக் காட்டும். இது பல பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும் டிரான்ஸ்லேஷன் மூலம் 42 மொழிகளில் இந்த வசதியை பயனர்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.