குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்

 

குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்

குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் திருடிய சம்பவம் தெரிய வந்து அந்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத்: குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் திருடிய சம்பவம் தெரிய வந்து அந்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அந்நிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத் நாட்டு நிதிதுறை அதிகாரிகளும், பாகிஸ்தான் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். இருதரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்ததை அடுத்து, அனைவரும் விருந்துக்காக சென்றனர். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் யாரும் இல்லையென உறுதி செய்துவிட்டு குவைத் நாட்டு அதிகாரி ஒருவர் அமர்ந்திருந்த மேஜை மீது அவர் வைத்திருந்த இருந்த பர்ஸை திருடி விட்டார்.

இதனையடுத்து பர்ஸை காணவில்லை என்று குவைத் அதிகாரி தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை என்பதால் இதுகுறித்து அவர் புகார் தெரிவித்தது. அப்போது பாதுகாப்பு படையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது  பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் ஜரார் ஹைதர் கான் குவைத் அதிகாரியின் பர்ஸை திருடியது தெரியவந்தது.  

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அந்த நாட்டிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பர்ஸை திருடி நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய அந்த அதிகாரியை பாகிஸ்தான் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.