குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டு இந்தியாவில் வெளியாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன்

 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டு இந்தியாவில் வெளியாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை விவோவின் ஐகூ பிராண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை விவோவின் ஐகூ பிராண்டு அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் பிப்ரவரி 25-ஆம் தேதி ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ttn

மேலும் புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை 5ஜி நெட்வொர்க் வசதி தொடங்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது வெளியாக உள்ளது.