குவார்ட்டர் குடித்துவிட்டு குழந்தைக்கு தாய்ப்பாலா ! குடி குழந்தையை கொல்லும் என எச்சரிக்கை !

 

குவார்ட்டர் குடித்துவிட்டு குழந்தைக்கு தாய்ப்பாலா ! குடி குழந்தையை கொல்லும் என எச்சரிக்கை !

ஆரோக்கியமான உணவும், நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் இருப்பதால் குழந்தை பிறந்து முதல் 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமான உணவும், நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் இருப்பதால் குழந்தை பிறந்து முதல் 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் தரவேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் உடல் எடை அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாயின் உடலிலிருந்தே வருவதால் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.

Breastfeeding

தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் மதுபானம் அருந்தினால் உங்கள் உடலில் சில மாற்றங்களைச் செய்யும்.  தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் மதுபானம் அருந்துவதால் தாய்ப்பாலின் அளவு குறைக்கிறது. அதாவது 23% வரையிலான தாய்ப்பாலின் அளவு குறைவதினால் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும்.

நீங்கள் அருந்தும் மதுபானம் தாய்ப்பால் வழியாக 0.5% முதல் 3% வரை குழந்தைகளுக்குச் செல்லும். இதன் அளவு குறைவாகக் காணப்பட்டாலும் குழந்தைகளின் உடலுக்கு இது மிகப் பெரிய அளவாகும். இதனால் குழந்தைகளுக்குக் கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Dont drink

ஆனால் தாயின் தாய்ப்பாலில் சிறிதளவு மதுபானம் இருந்தாலும் குழந்தைகளுக்கு தேவையான ஆன்டிபாடிகளை உறிஞ்ச முடியாமல் போய்விடும். அதிக அளவு ஆல்கஹாலினால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு மூளையின் செல்கள் விரைவில் சிதைவடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Breastfeeding

மதுபானம் அருந்திவிட்டு தாய்ப்பால் கொடுப்பதினால் அவர்களின் தூக்கம் மற்றும் உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படும்தாய்ப்பாலில் அதிக அளவு மதுபானம் கலக்கும்போது அதனைப் பருகுவதால் குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு திடீர் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உங்களின் குழந்தை நலனுக்காக சில மாதங்கள் மதுபானம் அருந்தாமல் இருப்பதே நல்லது.