‘குவாட்டர் பாட்டிலில் இருந்த சுக்கு காபி’.. 300 ரூபாய் போச்சு :ஏமாந்து போன குடிமகன்கள்!

 

‘குவாட்டர் பாட்டிலில் இருந்த சுக்கு காபி’.. 300 ரூபாய் போச்சு :ஏமாந்து போன குடிமகன்கள்!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது பெருகி வரும் நிலையில், பல பகுதிகளில் உள்ள குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் திணறி வருகின்றனர். மது இல்லாமல் முடங்கி கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது. அதே போல பல இடங்களில், பிளாக்கில் சரக்கு விற்பனைகளும் நடைபெற்று வருகின்றன. 

ttn

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு பகுதியில் சரக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிந்து குடிமகன்கள் எல்லாரும் அந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு சரக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நபர், ஒரு குவாட்டர் ரூ.300 என்று கூறியுள்ளார்.  காசு எவ்வளவா இருந்தா என்ன.. சரக்கு கிடைச்சா போதும் என்று குடிமகன்கள் எல்லாரும் சரக்கை வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர். உடனே அந்த விற்பனையாளர் போலீசார் வருது.. ஓடிடுங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். உடனே அங்கிருந்த எல்லாரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். 

ttn

அதன் பின்னர் குடிமகன்கள் எல்லாரும் ஒரு புதரில் மறைந்து சரக்கை திறந்து குடிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது சுக்கு காபி போல வாசனை வந்துள்ளது. இருப்பினும் அதனை சரக்கு என்று நம்பி பலர் குடித்துள்ளனர். கடைசியில் அது சுக்கு காபி தான் என்று தெரிய வந்துள்ளது. ரூ.300 கொடுத்து சுக்கு காபி வாங்கி குடித்து விட்டோமோ என்று எண்ணி, குடிமகன்கள்  பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.