குழிக்குள் மண் சரிந்து 6 இந்தியர்கள் பலி – ஓமனில் கோர சம்பவம்!

குழிக்குள் மண் சரிந்து 6 இந்தியர்கள் பலி – ஓமனில் கோர சம்பவம்!

ஓமன் நாட்டில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் இந்திய தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண் சரிந்து 6 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சீப் எனும் பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் இந்திய தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வந்தனர்.

indians

தரை தளத்தில் இருந்து சுமார் 14 அடி கீழே வரை குழி தோண்டும் பணி நடைபெற்று வருவதால், பக்கவாட்டில் சாரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் பணியாளர்கள் உள்ளே இறக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் மழை பெய்ததால் பள்ளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. தொழிலாளர்கள் பலர் மேலே வந்துவிட்ட நிலையில், பள்ளத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 6 இந்திய தொழிலாளர்கள் மண்சரிவு ஏற்பட்டு குழிக்குள் சிக்கினர். இச்சம்பவம் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து குழிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பு படையினர் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு போராடி 6 இந்தியர்களை இறந்த நிலையில் மீட்டுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து தலைநகர் மஸ்கட்டில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உண்மையிலேயே மண்சரிவு ஏற்பட்டு தான் இவர்கள் உயிரிழந்தார்களா? இல்லை, இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

oman

உயிரிழந்த 6 இந்திய தொழிலாளர்கள் குறித்து மஸ்கட் இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து செய்தியாவது:

மஸ்கட் நகரில் சீப் பகுதியில் கனமழையை தொடர்ந்து, இந்தியர்கள் என கருதப்படும் 6 தொழிலாளர்கள் பலியான தகவல் அறிந்து வேதனை அடைந்தோம். சம்பவம் குறித்த முழு விவரங்களை அறிய ஓமன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். 6 தொழிலாளர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளோம் என பதிவிட்டனர்.