‘குழாய் அடி சண்டை’…உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு !

 

‘குழாய் அடி சண்டை’…உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு !

அப்பகுதியைச் சேர்ந்த சீமராயப்பன் என்பவருக்கும் வியாகம்மாள் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தவையே. சில இடங்களில் கார்ப்பரேஷன் தண்ணீர் வரும் போது மக்கள் அதனைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அப்போது, தண்ணீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இதனாலேயே பல இடங்களில் குழாய் அடி சண்டைகள் நடக்கும். சில இடங்களில் பெண்கள் குடத்தைக் கொண்டு அடித்து உதைத்துக் கொண்ட சம்பவங்களும் நடந்ததுண்டு. பெரும்பாலான இடங்களில் இத்தகைய சூழலே நீடிக்க, தென்காசி மாவட்டத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரம் கிராமத்தில் நேற்று தெருக்குழாயில் தண்ணீர் வந்துள்ளது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சீமராயப்பன் என்பவருக்கும் வியாகம்மாள் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை ஓயாமல் நடந்து கொண்டே இருக்கையில் ஆத்திரமடைந்த சீமராயப்பன், வியாகம்மாளை உருட்டுக் கட்டையைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். இதனால்,  ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த வியாகம்மாளை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தலைமறைவான சீமராயப்பனைத் தேடி வருகின்றனர்.