குழப்பமே வேண்டாம்… எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறைதான்-முதலமைச்சர் பழனிசாமி 

 

குழப்பமே வேண்டாம்… எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறைதான்-முதலமைச்சர் பழனிசாமி 

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக  கொரோனாவால் சவுதியிலிருந்து திரும்பிய 70 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது. கொரோனா வைரஸ் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும் என்பதால் தமிழகத்தில் உள்ள ப்ரீ கேஜி, எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்புவ்ரை வரும் 31 ஆம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்திலேயே அந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை குறித்து பள்ளிகளுக்குத்  தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்தார். 

ttn

இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான். முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்- மார்ச் 16 முதல் 31ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிக்கப்பட்டபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை ” என கூறினார்.