குழந்தை பிறந்த 30 நிமிடங்களிலேயே தேர்வை எழுதிய ‘சூப்பர் மாம்’!

குழந்தை பிறந்த 30 நிமிடங்களிலேயே தேர்வை எழுதிய ‘சூப்பர் மாம்’!

எத்தியோப்பியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மேட்டு என்ற ஊரில் வசித்து வரும் 21 வயது பெண் அல்மான் டெரேஸ், குழந்தை பிறந்த 30 நிமிடங்களில் தேர்வை சந்தித்துள்ளார். 

எத்தியோப்பியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மேட்டு என்ற ஊரில் வசித்து வரும் 21 வயது பெண் அல்மான் டெரேஸ், குழந்தை பிறந்த 30 நிமிடங்களில் தேர்வை சந்தித்துள்ளார். 

எத்தியோப்பியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மேட்டு என்ற ஊரில் வசித்து வரும் 21 வயது பெண் அல்மான் டெரேஸ், இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அதே நேரத்தில் தனது படிப்பையும் மேற்கொண்டு வந்துள்ளார். 

கர்பிணி பெண்ணாக இருந்த அல்மானுக்கு இந்த வாரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். குழந்தை பிறக்கும் முன்பே தேர்வை முடித்துவிடலாம் என அல்மான் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ரம்ஜான் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.  இந்நிலையில் தேர்வு நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் வரை அல்மானுக்கு குழந்தை பிறக்கவில்லை. தேர்வு நடக்கும் நாளன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நேரத்திற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த வலியிலும் எப்படியாவது தேர்வை எழுத வேண்டும் என வீராப்புடன் இருந்துள்ளார் அல்மான். இதையடுத்து அவரது உறவினர்கள், கல்வி நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அல்மான் மருத்துவமனையிலிருந்தே தேர்வை எழுத ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அல்மான் ஆங்கிலம், ஆம்ஹாரிக், மற்றும் கணக்கு ஆகிய தேர்வுகளை எழுதினார்.