குழந்தை இயேசுவின் கண்ணில் வடியும் ரத்தம் – அபாயத்தின் அறிகுறியா ?

 

குழந்தை இயேசுவின் கண்ணில் வடியும் ரத்தம் – அபாயத்தின் அறிகுறியா ?

மெக்சிகோ :

உலகில் அங்கங்கே ஏதேனும் அதிசிய நிகழ்வுகள் நடந்து மக்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன. நம் ஊரில் பிள்ளயார் பால் குடிப்பார், வேப்பமரத்தில் பால் வடியும் என்பது போல மெக்சிகோவில் இயேசுவின் கண்களில் ரத்தம் வடிந்துள்ளது.

ரத்தக் கண்ணீர் 

மெக்சிகோ நாட்டில் குழந்தை இயேசு சிலையின் கண்களில் இருந்து 4 – வது முறையாக ரத்த கண்ணீர் வழிவதைப் பார்த்து ஊர்மக்கள் துணுக்குற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு. மெக்சிகோவின் அகாபுல்கோ பகுதியில் இருந்து 42 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜீசஸ்

அங்கு இருக்கும் குழந்தை இயேசு சிலையின் கண்களில் இருந்து திடீரென ரத்தம் வழிந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும், கடவுள் ஏதோ ஒரு செய்தி சொல்ல வருவதாக பேசி வருகின்றனர். வேறு சிலர் இது சாத்தானின் சதிச்செயல் என்றும் பீதி பரப்பி வருகின்றனர்.

கடவுள் வேதனை 

இதற்கு முன்பு சென்ற வருடம் புத்தாண்டு தினத்தில் இதே சிலையின் கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது. ஒரு வருடத்தில் அடுத்தடுத்து 4 முறை இந்த சம்பவம் நடந்திருப்பதால், ஊர் மக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். அங்கு பொது பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதி குடிமக்கள் அறிக்கையின்படி ஒவ்வொரு 100,000 மக்களிலும் 111 பேர்  ஒவ்வொரு நாளும் கொலை செய்யப்படுகிறார்கள்.இதன் காரணமாக கடவுள் வேதனைப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.