‘குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது’ : எம்.பி. ஜோதிமணி வருத்தம்!

 

‘குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது’ : எம்.பி. ஜோதிமணி வருத்தம்!

பள்ளத்துக்குள் மண்  சரிவு ஏற்பட்டுள்ளதால்  குழந்தையின் நிலை குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

திருச்சி: குழந்தையை மீட்டு  தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று எம்.பி. ஜோதிமணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்  சுர்ஜித் என்ற  2 வயது குழந்தை நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில்  தவறி விழுந்துள்ளது.  குழந்தையை மீட்கும் பணியில் கடந்த 20 மணிநேரமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். குழந்தை சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளத்துக்குள் மண்  சரிவு ஏற்பட்டுள்ளதால்  குழந்தையின் நிலை குறித்து தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் குழந்தையை உயிருடன் மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்து செயல்பட்டு வருகிறது. 

surjith

இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற எம்.பி. ஜோதிமணி சுர்ஜித்தின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கனத்த இதயத்துடன்  இருக்கிறோம்.  குழந்தையை மட்டும் மீட்டுக்கொடுத்துவிடுங்கள் என்று குழந்தையின் தாய் என்னிடம் கண்ணீருடன் கேட்டபோது என்னால் ஆறுதல் கூட கூறமுடியவில்லை. இருப்பினும் குழந்தையை மீட்டு  தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடந்து செல்வதால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விடுகிறது’ என்றார்.

jothimani

தொடர்ந்து பேசிய அவர், ‘இஸ்ரோ, ஏவுகணை என தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது. இதைத் தடுக்க பிரத்தியேக கருவியை வடிவமைக்கக்கோரி  மக்களவையில்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்’ என்றார்.