குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

 

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

பிக்பாஸில் பல விநோதங்கள் நடக்கும். தொடக்கம் முதலே சிலரை ஆடியன்ஸ்க்குக் காரணம் இல்லாமல் பிடிக்காமல் போய்விடும். ஆனால், உறவினர்கள் வரும் டாஸ்க் வாரத்தில் அது உடையும். இந்த உலகின் ஏதோ ஓர் மூலையில் எவ்வித அடையாளமும் வாய்ப்பும் மறுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாகச் சிலர் வந்திருப்பார்கள். ஒருவேளை வேல்முருகன் இத்தனை நாட்கள் நீடித்திருந்தால் அவர்களின் குடும்பம் வரும்போது அப்படி நினைக்கும் சூழல் அமைந்திருக்கலாம். நேற்றைய எப்பிசோட்டில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

பிக்பாஸ் – 88- நாள்

வேக்கப் ஸாங் முடிந்ததும், சீரியஸாக சமைத்துக்கொண்டிருந்தார் கேபி. பாரேன்… ஏதோ ஸ்கூல் போய்ட்டு வரும் பெண் மாதிரி இருந்த கேபி, வீட்டுக்கே சமைத்து போட ரெடியாயிட்டாங்க. எல்லோரையும் ஃப்ரீஸ் செய்து கேபியின் அம்மாவை உள்ளே விட்டார்கள்.

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

ஓடிச்சென்று கட்டியணைத்துக்கொண்டார் கேபி. அவருக்கு முன்பே அம்மா அழத்தொடங்கி விட்டார்.’மூணு நாளா மேக்கப் போட்டுட்டு காத்திருக்கிறேன்’ என்று சொன்னதும், ‘அழக்கூடாது’ எனத் தீர்மானமாக இருந்ததும் நல்ல விஷயங்கள்.

கேபி இத்தனை நாட்கள் உள்ளே இருப்பது எல்லோருக்குமே ஆச்சர்யம்தான். கேபியும் அம்மாவுக்கும்தான். அதனால், பட்டும் படாமல் அட்வைஸ் சொல்லிட்டு இருந்தார். எப்படியும் ஃபைனலுக்குச் சென்று கோப்பை கிடைக்க வாய்ப்பு மிகக் குறைவு. அதனால் பொதுவாக உரையாடிவிட்டுச் சென்றார்.

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

அடுத்து, ஆஜித்தின் அம்மாவும் அக்காவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். ஆனால், அப்பவும் நடந்துசென்று நிதானமாகவே கதவைத் திறந்து வரவேற்றார். அவர்களும் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் பேசினார்கள். ரம்யாவின் சிரிப்பை பாராட்டி, கிண்டலடித்து, மீண்டும் பாராட்டி ஒப்பேற்றினார்கள்.

அம்மாவைப் பற்றிய அழகான பாடலைப் பாடும் வாய்ப்பு ஆஜித்க்கு கிடைத்தது. இப்படி கிடைத்த நேரத்தில் எல்லாம் பாடியிருந்தாலே ஆஜித் மீது ஃபோக்கஸ் கிடைத்திருக்கும். சொற்ப நாட்கள் இருந்த வேல்முருகன் பாடிய அளவுக்குக்கூட இத்தனை நாட்கள் இருக்கும் ஆஜித் பாட வில்லை என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

இன்னும் மீதமிருப்பது ஆரியின் குடும்பம் மட்டுமே. இரவில் அவரை ஃப்ரீஸ் செய்ய வைத்து, மெயின் கேட் வழியாக ஆரியின் மகளை மட்டும் அனுப்பினார் பிக்கி. அவளைக் கண்டதும் எல்லோரும் உற்சாகமாக ஓடி கட்டிக்கொண்டனர். ஆனால், டாஸ்கில் இருப்பதால் ஆரி கண்ணீர் வழியே பார்த்துக்கொண்டிருந்தார். அதுவும் சின்னஞ்சிறு மகள்  அவரின் அருகே கையெட்டும் தொலைவில் வந்தும், பேசிக்கொண்டும் இருக்கும்போதும் டாஸ்க் என ஃப்ரீஸில்  இருந்தார் ஆரி. இது போட்டியின் ஸ்பிரிட் எனச் சிலர் கொண்டாடலாம். ஆனால், ஆரி நிஜமாகவே அம்பிதான் என்று நிருபிக்கும் தருணம்.

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

ஒரு மிஷின்போல, விதிகளுக்குக் கட்டுப்பட்டு நிற்பது ஒருவகையில் உணர்வுகளுக்கு எதிராகத்தான் இருக்கும். தங்கள் உறவினர்கள் வருகையில் பாலா கூட ஃப்ரீஸிலிருந்து விலகிவிட்டார். ஆரியின் இந்தச் செயல் அபத்தமானது. இதுதான் அவரின் இயல்பு என்றால் வியப்பாகவும் கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கான தனிமைப்படுத்தும் காலத்தையும் சேர்த்துக்கொண்டால் 100 நாட்களுக்குப் பிறகு மகளைச் சந்திக்கும்போது டாஸ்கில் உறைந்திருப்பது இயல்பில் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது.

ஆரியின் மகள் வீட்டுக்குள் வந்ததுமே புதிய ஒளி வந்ததுபோல அத்தனை பிரகாசமானது பிக்பாஸ் வீடு. ஏனெனில், வீட்டின் குட்டி குட்டி இடங்களில் ஆரியின் மகள் தம் செல்லப் பாதங்களால் அளந்துகொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் பெயரையும் ஷார்ட்டாக, ஸ்வீட்டாகச் சொன்னபோது அத்தனை அழகு.

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

கன்ஃபெக்‌ஷன் ரூமிலிருந்து ஆரியின் மனைவி உள்ளே வரவழைக்கப்பட்டார். ஆரிக்கு வெளியே இருக்கும் செல்வாக்கினால் பெரிய அட்வைஸ் கொடுக்க வேண்டியதில்லை என்பதால் லேசாகச் சில விஷயங்களைப் பேசினார். ஆனால், எல்லோரின் கவனமும் ஆரியின் மகள் மீதுதான் இருந்தது. போதாதற்கு மழை வேறு. ஆட்டம் ஆடி கொண்டாடி விட்டாள்.

எல்லோரும் கொண்டாட்டமாக இருக்கையில் ரம்யா, ஆரியின் மகளுக்கு பரிசு எடுத்து வந்து தந்தார். இந்த இணக்கம் ஒருவேளை ஆரி ஆர்மிக்கு மகிழ்ச்சியைத் தந்து ரம்யாவுக்கு எதிரான வாக்கு செலுத்துவதை நிறுத்தலாம். ஆனால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

குழந்தையைப் பார்த்தும் அசையலையே… ஆரி நீங்க நிஜமாவே அம்பிதான்! பிக்பாஸ்4

பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நடக்கும் குரூப்பிஸம்போல, வெளியே நடக்கும் ஃபேரைட்டிஸமும் ஆபத்தானதே. ஆரியின் ரசிகர்கள் அவருக்கு வாக்களித்து காப்பாற்றுவது என்று முடிவெடுக்காமல், ஆரியை எதிர்த்து பேசும் நபர்களை வீட்டுக்கு அனுப்பும் விதமாக கேபி, ஆஜித், ஷிவானியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் நன்றாக விளையாடிய ஷனம், அனிதா, நிஷா, அர்ச்சனா எல்லாம் வெளியேறினார்கள். இது பிக்பாஸ்  நிகழ்ச்சியையே சோர்வடைய வைத்து விட்டது.