குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண் எம்பியை விரட்டியடித்த சபாநாயகர்!

 

குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த பெண் எம்பியை விரட்டியடித்த சபாநாயகர்!

குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததால் குழந்தையை தூக்கிக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார். உடனே அங்கிருந்த காவலர்கள் சுலைக்காவை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களிடம் சண்டையிட்டு உள்ளுக்குள் போய் நாடாளுமன்ற அவையில் அமர்ந்தார்.

கென்ய நாடாளுமன்றத்திற்கு பெண் எம்.பி ஒருவர் தனது குழந்தையுடன் வந்ததால் வெளியேற்றப்பட்டார். 

சுலைக்கா ஹசன் என்பவர் எம்பியாகவுள்ளார். இவருக்கு மூன்று குழந்தைகள், கடைசி குழந்தைக்கு ஐந்து மாதம் ஆகிறது. குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாரும் இல்லாததால் குழந்தையை தூக்கிக்கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார். உடனே அங்கிருந்த காவலர்கள் சுலைக்காவை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களிடம் சண்டையிட்டு உள்ளுக்குள் போய் நாடாளுமன்ற அவையில் அமர்ந்தார். அப்போது  நாடாளுமன்ற துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார். மேலும் குழந்தையை அழைத்துவந்த சுலைக்காவை ஆண் எம்.பிக்கள் கடுமையாக விமர்சித்தனர்.  இதனால் சுலைக்கா குழந்தையுடன் அவையிலிருந்து வெளியேறினார். 

இதுகுறித்து எம்.பி. சுலைக்கா கூறுகையில்,  ” குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. அதனால் தான் அழைத்துவந்தேன். நாடாளுமன்றத்தில் குழந்தைகளைப் பாத்துக் கொள்ளக் கூடிய காப்பகம் இருந்தால் நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். அனைவராலும் குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக பணியாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. பெண்கள் அரசியலுக்கு அதிகம் வர வேண்டுமெனில், முதலில் நாடாளுமன்றம் அவர்களுக்கு குடும்ப உணர்வை தர வேண்டும்” என்று கூறினார்.