குழந்தையுடன் ஆடி பாடி டிக் டோக் எடுத்த செவிலியர்கள்: மருத்துவமனை நிர்வாகம் அதிரடி முடிவு!

 

குழந்தையுடன் ஆடி பாடி டிக் டோக்  எடுத்த செவிலியர்கள்: மருத்துவமனை நிர்வாகம் அதிரடி முடிவு!

மருத்துவமனையில் டிக் டோக்  வீடியோவுக்கு நடனம் ஆடிய செவிலியர் நால்வருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா: மருத்துவமனையில் டிக் டோக்  வீடியோவுக்கு நடனம் ஆடிய செவிலியர் நால்வருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

டிக் டோக்  மோகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சிலர் செல்லும் இடமெல்லாம் டிக் டோக் வீடியோ எடுத்து பதிவிட்டு லைக்ஸுக்காக காத்து கிடக்கின்றனர். அந்த வகையில் ஒடிசாவில் மால்கங்கரி மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது. அதில் செவிலியர்களாக  ரூபி ரே, டபாஸி பிஸ்வாஸ், ஸ்வப்னா பாலா, நந்தினி ராய் ஆகிய நால்வரும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

tiktok

டிக் டோக்  மீது ஆர்வம் கொண்ட இவர்கள் அடிக்கடி பாடல்களுக்கு வாயசைத்தும், நடனம் ஆடியும் வீடியோ பதிவிடுவது வழக்கம். அதன்படி சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையிலேயே ஆடிப்பாடி வீடியோ எடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த குழந்தைகளைத் தூக்கி கையில் வைத்தபடியும், கொஞ்சுவது போலவும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.  இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து முக்கியமான பொறுப்பில் இருக்கும் நபர்கள் இப்படி அலட்சியமாக இருக்கலாமா? என்று பலரும்  கேள்வி எழுப்பினர். 

tiktok

இதை தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் கேட்டு  மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் நான்கு  பேருக்கும்  நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர்களை மருத்துவமனை நிர்வாகம் கட்டாய விடுப்பில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.