குழந்தையின் தலையில் சிக்கி கொண்ட பானை… நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்புத் துறையினர்!

 

குழந்தையின் தலையில் சிக்கி கொண்ட பானை… நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட தீயணைப்புத் துறையினர்!

அதை எடுக்க முயன்ற போது  வராததால் அலறிய குழந்தை வீறிட்டு அழுதுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆபிரஹாம் – விஜி தம்பதி. இவர்களுக்கு பியான் என்ற மூன்று வயது மகன் உள்ளார்.  வழக்கம்போல் வீட்டு  வாசலில்  தவழ்ந்து கொண்டு விளையாடி கொண்டிருந்த பியான்  அருகில்  ஈயப்பானை ஒன்று இருந்தது. அதை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தான். திடீரென்று  ஈயப்பானையை பியான்  தலையில் கவிழ்த்துக் கொண்டான். அதை எடுக்க முயன்ற போது  வராததால் அலறிய குழந்தை வீறிட்டு அழுதுள்ளது.

ttn

குழந்தையின் அழுகை சத்தத்தைக்  கேட்டு அங்கு ஓடிவந்த தாய் விஜி, பியான்  தலையில் மாட்டிருந்த பானையை எடுக்க முயன்றுள்ளார். முடியவில்லை.. அக்கம் பக்கத்தினரும் அவருக்கு உதவி செய்துள்ளனர். ஆனாலும் பானையை எடுக்க முடியாததால் பதறிப்போயுள்ளனர்.

ttn

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஜோஜின் என்பவர், பியானை தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு  அழைத்து சென்றார். இதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள்  கத்திரியால்  பானையை வெட்டி குழந்தையை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.