குழந்தைக்கு ‘கூகுள்’ என பெயர் வைத்த பெற்றோர்!

 

குழந்தைக்கு ‘கூகுள்’ என பெயர் வைத்த பெற்றோர்!

இந்தோனேஷியாவை சேர்ந்த தம்பதியினர் அவர்களது குழந்தைக்கு கூகுள் என பெயரிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவை சேர்ந்த தம்பதியினர் அவர்களது குழந்தைக்கு கூகுள் என பெயரிட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேஷியாவில் எல்லா கரின், ஆன்டி சாஹ்யா சாபுத்ராஎன்ற தம்பதியருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என இருவரும் யோசித்து கூகுளில் தேட ஆரம்பித்தனர். அவனுக்கு அவன் தந்தை ஆன்டி சாஹ்யா அவருடைய மனைவி எல்லா கர்ப்பிணியாக இருக்கும்போதிலிருந்தே பிறக்கப் போகும் குழந்தைக்கு வித்தியாசமாகவும், தொழில்நுட்ப பெயரகவும், உலகமே திரும்பி பார்க்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என எண்ணினர். விண்டோஸ், ஐபோன், மைக்ரோசாஃப்ட், ஐஓஎஸ் என்ற பெயர்களெல்லாம் கூட அவர்களது பரிசீலனை லிஸ்டில் இருந்துள்ளது. கடைசியாக ஆன்டி சாஹ்யா, தங்கள் மகனுக்கு கூகுள் என பெயரிட்டுள்ளார். இந்த பெயர் ஆண்டியின் குடும்பத்தினர் யாருக்குமே பிடிக்க வில்லையாம். 

கூகுளை போல தங்கள் மகனும் எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்றும், எல்லாரும் மகனை பற்றி பெருமையாக பேசவேண்டும் என்றும் இந்த பெயரை வைத்ததாக கூகுளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.