குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் தேங்காய் திரட்டுப்பால்  

 

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் தேங்காய் திரட்டுப்பால்  

இந்த தித்திப்பான தேங்காய் திரட்டுப்பாலை செய்து தந்தால் நாக்கைச் சொட்டிக் கொண்டு குழந்தைகள் வழித்து சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த தித்திப்பான தேங்காய் திரட்டுப்பாலை செய்து தந்தால் நாக்கைச் சொட்டிக் கொண்டு குழந்தைகள் வழித்து சாப்பிட்டு விடுவார்கள்.

தேவையான பொருட்கள் : –
பால் – 1 லிட்டர

பொடித்த வெல்லம்- 1 1/4 கோப்பை

துருவிய தேங்காய் – 1 கோப்பை

வறுத்த பாசிப்பருப்பு – 1 1/2 மேஜைக் கரண்டி
நெய் – 1/2 கோப்பை

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

செய்முறை : –

பாசிப்பருப்பை முதலில் மிக்ஸியில் பொடித்துக் கொண்டு பிறகு தேங்காய் பூவை அதில் போட்டு, தண்ணீரை விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும். பால் கொஞ்சம் சூடானவுடன் பொடித்த வெல்லத்தைப் போட்டு, ஒரு கிளறு கிளரி அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு வெல்லப் பொடி நன்றாகக் கரையும் வரை கிளறி வடிகட்டவும்.

வடிகட்டிய பாலுடன், அரைத்த தேங்காயை நன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

நன்றாகக் கெட்டியானவுடன், நெய்யை ஊற்றிக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்தவும்.
சுவையான தேங்காய் திரட்டுப் பால் ரெடி!