குழந்தைகள் பெண்கள் உட்பட 100-க்கு மேற்பட்டோர் சுட்டு கொலை!

 

குழந்தைகள் பெண்கள் உட்பட 100-க்கு மேற்பட்டோர் சுட்டு கொலை!

இப்படி தொடர்ந்து மாறி மாறி பழிதீர்த்துக் கொண்டிருந்தால் ஒரு முன்னேறறமும் ஏற்பட வாய்பில்லை என்று நேற்று சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வந்திருந்த மாலி குடியரசு தலைவர் பவுபாக்கர் இப்றாஹிம் அந்நாட்டு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சின்னஞ் சிறு நாடு மாலி குடியரசு.இங்கு தோகன் எனும் வேட்டை சமூக மக்களும்,அல்- கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஃபுலானி என்ற பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

மத்திய மாலியில் இருக்கும் தோகன் இன மக்கள் வசிக்கும் கிரமாத்துக்கு அதிகாலையில் வந்த ஆயுதம் தாங்கிய கும்பலொன்று வீடு வீடாக புகுந்து 100 க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றனர். உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை எனினும் இது வழக்கமான பழிக்குப்பழி தாக்குதல் என்பது தெள்வாகத் தெரிகிறது.

mali village

மூன்று மாதங்களுக்கு முன்பு ஃபுலானி இனத்தைச் சேர்ந்த 160 பேரை தோகன் இனத்தவர்கள் கொன்றதற்காக , இப்போது ஃபுலானிகள் பழி தீர்த்திருப்பதாக தெரிகிறது.இப்படி தொடர்ந்து மாறி மாறி பழிதீர்த்துக் கொண்டிருந்தால் ஒரு முன்னேறறமும் ஏற்பட வாய்பில்லை என்று நேற்று சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வந்திருந்த மாலி குடியரசு தலைவர் பவுபாக்கர் இப்றாஹிம் அந்நாட்டு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.

‘நாம் உயிர் வாழ வேண்டுமானால் அதற்கு ஒற்றுமைதான் ஒரே வழி என்று சொன்ன இப்றாஹிம் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடுதிரும்பினார்.

mali village

கிராமத்தில் இருந்த மனிதர்கள் மட்டுமல்ல ஆடுமாடுகள் கூடக் கொல்லப்பட்டு விட்டன.வீடுகளையும் எரித்து விட்டார்கள். கிராமமே சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறது மாலி அரசின் அதிகார பூர்வமான செய்தி.

தாக்குதலில் தப்பிப் பிழைத்த அமோடு டாகோ என்பவர் கூறுகையில்… அதிகாலை நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய ஆட்கள் பிக்- அப்களிலும் ,பைக்களிலும் வந்து ஊரைச் சூழ்ந்து கொண்டார்கள்.அவர்கள் யாரையும் விடவில்லை,பெண்கள், குழந்தைகள்,முதியோர் அனைவரையும் கொன்றனர்.வீடுகளுக்கும் , உணவு தானிய சேமிப்புகளுக்கும் தீவைத்தனர் என்று அந்த கொடூரமான நிமிடங்கள் பற்றி சொல்லி இருக்கிறார்.