குழந்தைகளுக்கு மரபணு மாற்றம் செய்த மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

குழந்தைகளுக்கு மரபணு மாற்றம் செய்த மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சீனாவில் குழந்தைகளுக்கு மரபணு மாற்றம் செய்ததற்காக மருத்துவர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சீனாவில் குழந்தைகளுக்கு மரபணு மாற்றம் செய்ததற்காக மருத்துவர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஹீ ஜியாங்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். ஹெச்ஐவி தொற்றை எதிர்க்கும் வகையில் அந்தக் குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் ஜியாங்குய்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 3கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவருடனிருந்த உதவியாளர் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

Chinese scientist

மனிதர்களுக்குள் மரபணு மாற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதன் மூலம் செயற்கையாக மனிதர்களை உருவாக்கலாம். இதனால் வெளிநாடுகளிலும் இது சட்டவிரோத செயலாக பார்க்கப்படுகிறது.