குழந்தைகளுக்குப் பிடித்த சோற்றுக்  கற்றாழை அல்வா…

 

குழந்தைகளுக்குப் பிடித்த சோற்றுக்  கற்றாழை அல்வா…

சாதாரணமாக இருக்கும் போது எந்தப் பொருளின் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை. அதே பொருளைக் காசு கொடுத்து வாங்கும் போது தான் அதன் மதிப்பை அறிந்து பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். சிறு தானியங்களின் மீது ஏற்பட்டுள்ள மோகத்தைப் போன்றே இன்று கற்றாழையின் மீதும் நம்மவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சாதாரணமாக இருக்கும் போது எந்தப் பொருளின் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை. அதே பொருளைக் காசு கொடுத்து வாங்கும் போது தான் அதன் மதிப்பை அறிந்து பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். சிறு தானியங்களின் மீது ஏற்பட்டுள்ள மோகத்தைப் போன்றே இன்று கற்றாழையின் மீதும் நம்மவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. முகத்துக்கு பூச கற்றாழை க்ரீம்களை பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்த ஆரம்பித்ததில் இருந்து, கற்றாழையின் பயன்களை நம் மக்களும் இன்று புரிந்து வைத்திருக்கிறார்கள். 

aloe vera

ஆனால், வெறும் அழகைப் பாதுகாக்கும் க்ரீம்களாக மட்டுமே கற்றாழையை ஒதுக்கி வைக்க கூடாது. கற்றாழைக்கு கருப்பை புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. எலும்புருக்கி நோய்க்கு மிகச் சிறந்த மருந்து கற்றாழை. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும். பார்வைக் கோளாறுகளை சரிசெய்யும். குடல் கிருமிகளை அழித்து வெளியேற்றும். மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கு வலிமை தரும்.  

halwa

குழந்தைகளுக்கு, அவர்களுக்குப் பிடித்த மாதிரி இதை சமையலில் பயன்படுத்தி, சுவையாகத் தரலாம்.
நமது டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக கற்றாழை அல்வா செய்முறைகள்
 
தேவையானவை
சோற்றுக் கற்றாழை – கால்கிலோ
முந்திரி, பாதாம் பருப்பு தலா – 100கிராம்
சுக்கு  – 20கிராம்
ஏலக்காய் – 25கிராம்
நாட்டு வெல்லம் – அரைகிலோ
நெய்,  தேன் – 2டீஸ்பூன்கள்

halwa

செய்முறை
சோற்றுக்கற்றாழையை நன்றாக அரிசி கழுவிய தண்ணீரில் சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, கற்றாழையின் தோலை நீக்கி விட வேண்டும்.  ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அந்த நீரில் கற்றாழையைப் போட்டு நன்றாக வேகவைக்கவும்.

halwa

முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, சுக்கு, ஏலக்காய் என எல்லாவற்றையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தூள் செய்து கற்றாழையுடன் சேர்த்து விடவும்.
கற்றாழை நன்றாக வெந்ததும் வெல்லத்தை நன்றாக பொடித்து அதில் சேர்க்கவும். இனி, பாத்திரம் அடிப்பிடிக்காமல் இருப்பதற்காக கவனமாகக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சில நிமிடங்களில், அல்வா பதத்திற்கு வந்து விடும். அப்படி அல்வா பதத்திற்கு வந்ததும் நெய்,தேன் முதலியவைகளை ஊற்றி நன்றாக கிளறி விட்டு இறக்கவும். 

halwa

குழந்தைகள் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையான, சத்தான இனிப்பு வகையாகவும் இருக்கும்.