குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய லிச்சி பழம்: அதிரடி முடிவெடுத்த ஒடிசா அரசு!

 

குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய லிச்சி பழம்: அதிரடி முடிவெடுத்த ஒடிசா அரசு!

பீகாரில் மூளைக்காய்ச்சலினால் 112 குழந்தைகள் இறந்துள்ளதைத்  தொடர்ந்து லிச்சி பழங்களை  ஆய்வுக்கு உட்படுத்த ஒடிசா அரசு முடிவெடுத்துள்ளது. 

பீகாரில் மூளைக்காய்ச்சலினால் 112 குழந்தைகள் இறந்துள்ளதைத்  தொடர்ந்து லிச்சி பழங்களை  ஆய்வுக்கு உட்படுத்த ஒடிசா அரசு முடிவெடுத்துள்ளது. 

bihar

முசாபர்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் காரணமாகக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 66 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.  பலியான குழந்தைகளின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மூளைக் காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகள் மருத்துவர்களின்  தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது இந்த காய்ச்சலானது கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது.

bihar

இதன்காரணமாக  முசாபர்பூரில்  உள்ள பள்ளிகள் வரும் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளதாகவும்,  மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும் குழந்தைகள்  இறப்பிற்குக் காரணம் லிச்சி பழங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பீகார் மாநிலத்தில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும் லிச்சி பழங்களை வெறும் வயிற்றில் உண்டதால்  தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

litchi

இந்நிலையில் பீகாரில் குழந்தைகள் இறப்பின் எதிரொலியாக, ஒடிசா சுகாதார அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் லிச்சி பழங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக  பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்க மருத்துவமனை வந்த பீகார்  மாநில  முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக  குழந்தைகளின்  உறவினர்கள் கோ பேக் நிதிஷ்குமார் என்று கோஷமிட்டு  எதிர்ப்பு தெரிவித்தனர்.