குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுக்கறீங்களா… உஷார்!

 

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுக்கறீங்களா… உஷார்!

இன்றைய தலைமுறை குழந்தைகள் ஒரு பக்கம் அறிவியல் வரத்தோடு வளர்ந்து வந்தாலும், இன்னொரு வகையில் சாபத்தோடு வளர்வதாகவே தோன்றுகிறது. நீச்சல், நடைபயிற்சி, புழுதி பறக்கும் தெருக்களில் விளையாட்டு என்று மறைமுகமாக அவர்களது உடல் உழைப்பை வீணடித்து பல பெற்றோர்கள் டியூஷன் செண்டர்களிலும், தொலைக்காட்சிகளின் முன்னாலும், வீட்டின் வரவேற்பறையில் ஸ்மார்ட் போன் கொடுத்தும் அமர வைத்து விடுகிறார்கள்.

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுக்கறீங்களா… உஷார்!

இன்றைய தலைமுறை குழந்தைகள் ஒரு பக்கம் அறிவியல் வரத்தோடு வளர்ந்து வந்தாலும், இன்னொரு வகையில் சாபத்தோடு வளர்வதாகவே தோன்றுகிறது. நீச்சல், நடைபயிற்சி, புழுதி பறக்கும் தெருக்களில் விளையாட்டு என்று மறைமுகமாக அவர்களது உடல் உழைப்பை வீணடித்து பல பெற்றோர்கள் டியூஷன் செண்டர்களிலும், தொலைக்காட்சிகளின் முன்னாலும், வீட்டின் வரவேற்பறையில் ஸ்மார்ட் போன் கொடுத்தும் அமர வைத்து விடுகிறார்கள்.

இன்று நமது வாழ்வின் முக்கிய அங்கமாகவே ஸ்மார்ட் போன் மாறிவிட்டது. அழுகிற குழந்தைகளின் கைகளில் கூட, ஏதோவொரு வீடியோவில் பாட்டைப் போட்டு, ஸ்மார்ட் போனை கைகளில் கொடுத்து விடுகிறார்கள்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில், குழந்தைகள் பல மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர். பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்றைய நிலவரத்தில் குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி வருகின்றது. ஒரு வயது குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போனுக்கு குழந்தைகள் அடிமைகளாகவே மாறி வருகிறார்கள்.

உங்களது குழந்தைகள் எப்படி ஸ்மார்ட் போனை உபயோகப்படுத்துகின்றார்கள்? 
கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக் கொண்டு தானே பயன்படுத்துகிறார்கள். இது சரியான முறையல்ல. நீண்ட நேரம் அதே நிலையில் குழந்தைகள் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படும். குழந்தைகள் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது நேராக உட்கார்ந்து பயன்படுத்த கற்றுக் கொடுங்கள். தலையை குனிந்து போனை பார்ப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள். அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை கவனத்தை ஈடுபடுத்துங்கள்.  குழந்தைகளை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். 
குழந்தைகளுக்கு 8-9 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். எனவே குழந்தைகளை 8-9 மணி நேரம் தூங்க விடுங்கள். அதிக நேரம் தூங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகநேரம் தூங்குவது, குழந்தைகளின் உடல்நலத்திற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக காலையில் குழந்தைகளை எழுப்பும்போது, அடித்து எழுப்பாதீர்கள்.

குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. அதற்குப் பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். ஸ்மார்ட் போன் பயன்படுத்த உங்கள் குழந்தைகள் தெரிந்து வைத்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அளவோடு பயன்படுத்தவும் கற்றுக் கொடுங்கள். அப்போது தான் எதிர்கால தலைமுறை ஆரோக்கியத்தோடும் வளரும்!