குளிர்காலத்துக்கேத்த சிம்பிள் எலும்பு ரசம் செய்வது எப்படி?

 

குளிர்காலத்துக்கேத்த சிம்பிள் எலும்பு ரசம் செய்வது எப்படி?

இன்னும் இரண்டு மாத காலத்துக்கு சென்னையி குளிர்காலம்தான்,அடுக்கடி இருமல் லேசானது முதல் மிதமானது வரைக் காய்ச்சல் எல்லாம் இனிமேல் புழங்கத் துவங்கம்.அதற்கெல்லாம் எளிய பாதுகாப்பு ஏற்பாடு இது.இதைச் செய்ய சமையல் கலை விற்பனராக இருக்க வேண்டியது இல்லை.முக்கியமாக பேச்சிலர்களுக்கும் , சோம்பேறிகளுக்கும் ஏற்ற ரெசிப்பி இது!

தேவையான பொருட்கள்:

mutton rasam

உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு கறி எலும்பு அதிகமாக இருக்கும்படி வாங்குங்கள்.சிக்கனே போதும் என்றால்,கழுத்து கால் போன்றவறை கேளுங்கள்.கால் கிலோ கால் கேட்டால் அறைக்கிலோவே தருவார்கள்.

அடுத்து
இஞ்சிப்பூண்டு பேஸ்ட்
பூண்டு 10 பல்
பச்சை மிளகாய் 2
மிளகு 2 ஸ்பூன் 
சீரகம் 1 ஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
மல்லி இலை
கறிவேப்பிலை

செய்முறை:

mutton rasam

முதலில் புளியை கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.பிறகு
எலும்பையும் கறியையும் நன்றாக சுத்தம் செய்து அவறை ஒரு குக்கரில் போட்டு,இஞ்சிப்பூண்டு பேஸ்ட்,உப்பு,மஞ்சள் தூள்,இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரை 6 விசில் வரை வேக விட்டு அனைக்கவும்.

ஒரு மிக்சியில்,மல்லி இலை,சீரகம்,பூண்டுப் பற்கள்,மிளகு இவற்றை இட்டு கரகரப்பாக அறைத்துக் கொள்ளவும்.இப்போது, அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி,கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்திருக்கும் மிளகு,சீரகம்,பூண்டு பேஸ்ட்டை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.இப்போது ஊறவைத்திருக்கும் புளியைக் கரைத்து ஊற்றி மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.புளியின் பச்சை வாசம் போனதும் குக்கரைத் திறந்து எலும்போடு அது வெந்த நீரையும் எடுத்து ரசத்தில் ஊற்றுங்கள்.ஒரு கொதி வந்த உடன் ஆஃப் செய்து விடுங்கள்.இதை அப்படியே சூப்பாக கொஞ்சம் நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம்,அல்லது குழைய வடித்த சோற்றில் கொஞ்சம் தாராளமாகச் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்