குளிர்காலத்தில் உங்கள் செல்ல பிராணிகளுக்கு இதையெல்லாம் செய்திருக்கீங்களா..!?

 

குளிர்காலத்தில் உங்கள் செல்ல பிராணிகளுக்கு இதையெல்லாம் செய்திருக்கீங்களா..!?

குளிர்காலம் வந்ததும் எல்லோரும் குளிரிலிருந்து தப்பிக்க தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தேவையான அத்தனை நடவடிக்கையும் எடுப்பார்கள். தாங்கள் குடியிருக்கும் வீடு,பெட் என அத்தனையிலும் மாற்றம் செய்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.எல்லாம் சரி, உங்கள்  செல்ல பிராணிகளுக்காக என்னவெல்லாம் செய்திருக்கீங்க!? நீண்ட நாட்களாக செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு பிரச்சினையில்லை! அவர்களுக்கு போதிய அனுபவம் இருக்கும்.புதிதாக களம் இறங்கியிருப்பவர்களின் நிலைதான் பாவம்.அவர்களுக்காக அசத்தலான டிப்ஸ்..

dog

.1. உங்கள் செல்லப்பிராணியை அதன் வீட்டில் தனியே தூங்கவைக்காமல் உள்ளே படுக்கவையுங்கள் ஏனென்றால் கடுமையான குளிர் அவர்களை பாதிப்புக்குள்ளாகும் மேலும் அதனால் உடல்நல குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

dog

2. குளிர்காலத்தில் ஷேவிங் அல்லது ட்ரிம்மிங் செய்ய வேண்டாம், அதன் ரோமங்களே அவைகளின் உடல் வெப்பத்தை காக்க உதவும் ஆதலால் இக்காலத்தில் முடி வெட்டும் தவறுகளை ஒரு போதும் செய்யக்கூடாது.

3. குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வைக்காதீர்கள் அது அவர்களின் உடல்நலத்தை பாதிக்கும், வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் குளிப்பாட்டுவது நல்லது.

dog

4.மேலும் குளிர்ச்சியான தரையில் உங்கள் வீடு செல்ல பிராணிகளை படுக்க வைக்காதீர்கள், வெதுவெதுப்பான போர்வை அல்லது மெத்தையை ஒதுக்குங்கள் அது அவை குளிரிலிருந்து தப்பித்து நிம்மதியாக தூங்க ஏதுவாக இருக்கும். 

5.ஹீட்டர்களை அவர்களிடமிருந்து தள்ளியே வையுங்கள். இல்லையென்றால் அதில் பட்டு காயம் ஏற்படலாம். 

dog

6.உங்கள் செல்ல பிராணியின் கிண்ணத்தில் தண்ணீரினை அடிக்கடி மாற்றி கொண்டே இருங்கள். இல்லையெனில் தண்ணீர் மிகவும் குளிச்சியாகி குடிப்பதற்கு முடியாமல் போய்விடும். நம் செல்ல பிராணிகளுக்கும் போதுமான நீர் தேவைப்படும்.தட்டில் தண்ணீர் இருக்கு அது குடிக்கவில்லை என்று கவணக் குறைவாக இருந்துவிடக் கூடாது.

pet

7. மருத்துவரிடம் அழைத்து சென்று வருவது செல்ல பிராணிகளின் உடல் நலனுக்கு நல்லது. ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்து கொள்ளலாம். 

couple

8.என்ன பனி காலம் என்றாலும் காலையில் வாக்கிங்க்கு அழைத்துப் போவதை தவிர்க்கக்கூடாது.அப்படி போகும் போது,செல்ல பிராணிகளுக்கு என்று பிரத்யேக சாக்ஸ்,தலைக்கு மாட்டக்கூடிய ஸ்கார்ப் எல்லாம் பெட் பார்லர்களில் கிடைக்கும் அதை வாங்கி மாட்டிக்கொண்டு அழைத்துப் போங்கள்… மறக்காமல் நீங்களும் பாதுகாப்பு ஏற்பாட்டோடு செல்லுங்கள்.