குளிர்காலங்களில் சமையல் கேஸ் பயன்பாடு அதிகரித்ததல் விலையும் உயர்த்தப்பட்டது- அமைச்சரின் சர்ச்சை பேச்சு 

குளிர்காலங்களில் சமையல் கேஸ் பயன்பாடு அதிகரித்ததல் விலையும் உயர்த்தப்பட்டது- அமைச்சரின் சர்ச்சை பேச்சு 

குளிர்காலங்களில் சமையல் கேஸ் சிலிண்டரின் பயன்பாடு அதிகரிப்பதால் விலை உயர்த்தப்பட்டது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

குளிர்காலங்களில் சமையல் கேஸ் சிலிண்டரின் பயன்பாடு அதிகரிப்பதால் விலை உயர்த்தப்பட்டது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியா முழுவதும் தினமும் 30 லட்சம் இண்டேன் (Indane)  சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. சிலிண்டரின் விலை சர்வதேசச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகின்றன. அதே போலக் கடந்த 12 ஆம் தேதி மானியமில்லாத சிலிண்டர்களுக்கான விலை ரூ.147 உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 ஆவது முறையாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ரூ.287 உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் மானிய எரிவாயு சிலிண்டரின் விலை, 881 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெட்ரொலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  “குளிர்காலங்களில் சமையல் கேஸ் பயன்பாடுஅதிகரிப்பதால், அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதனால் எரிவாயுத் துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கவே விலை உயர்த்தப்பட்டுள்ளது” எனக்கூறினார்.