குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம்: திருமாவளவன் அதிரடி

 

குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம்: திருமாவளவன் அதிரடி

குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம் ஆனால் தமிழகத்தில் மலராது என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை: குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம் ஆனால் தமிழகத்தில் மலராது என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு -1957 என்ற நூல் வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. திமுகவை சேர்ந்த திருச்சி செல்வேந்திரன் எழுதிய இந்நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டினன் தலைமை தாங்கினார்.

விழாவில் திருமாவளவன் பேசுகையில், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து என கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பேசினர்.

அரசியலமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டை பாதுகாக்க முடியாது. ஆர்எஸ்எஸ், சங் பரிவார், இதன் அரசியல் முகமான பாஜகவால் அரசியல் அமைப்பிற்கும், ஜனநாயக உரிமைக்கும் ஆபத்து வந்துள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடந்த 10-ம்தேதி திருச்சியில் சனாதன எதிர்ப்பு, தேச பாதுகாப்பு மாநாடு நடத்த இருந்தோம். இந்த மாநாடு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் எல்லா தலைவர்களும் கலந்து கொள்வார்கள். குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழ்நாட்டு மண்ணில் தாமரை மலராது என்றார்.