குல்பி விற்கும் குத்து சண்டை வீரர்: கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள்!

 

குல்பி விற்கும் குத்து சண்டை வீரர்: கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள்!

குத்துச்சண்டை போட்டிகளில்  விருதுகளைக் குவித்த அரியானா வீரர் தினேஷ் குமார், வாங்கிய கடனை அடைப்பதற்காகச் சைக்கிளில் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா : குத்துச்சண்டை போட்டிகளில்  விருதுகளைக் குவித்த அரியானா வீரர் தினேஷ் குமார், வாங்கிய கடனை அடைப்பதற்காகச் சைக்கிளில் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவர் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார். குறுகிய காலமே நாட்டுக்காக அவர் விளையாடியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். சிறந்த விளையாட்டு வீரருக்காக மத்திய அரசின் அர்ஜுனா விருது தினேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாலை விபத்து காரணமாக விளையாட்டில் ஈடுபட முடியாமல் போன தினேஷின் சிகிச்சைக்காக அவரது தந்தை பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் நெருக்கடி காரணமாக  தற்போது தினேஷ், சைக்கிளில் குல்பி ஐஸ் விற்று வருகிறார்.

dinesh

இது குறித்து பேசியுள்ள தினேஷ், ‘கடன்களை அடைப்பதற்காக ஐஸ் விற்று வருகிறேன். திடீரென நடந்த விபத்தால் என்னால் விளையாட முடியவில்லை. எனக்கு நிலையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். என்னால், இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைச் சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்’ என்று  கூறியுள்ளார்.