குற்றாலத்திற்கு ஏன் வந்திருக்கிறோம்? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

 

குற்றாலத்திற்கு ஏன் வந்திருக்கிறோம்? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

குற்றாலத்திற்கு ஏன் வந்துள்ளோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ  தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.

நெல்லை: குற்றாலத்திற்கு ஏன் வந்துள்ளோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ  தங்க தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார்.

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எம்.எல்.ஏ உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3-வது நீதிபதியான சத்திய நாராயணனிடம் சென்றது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் 18 பேரும் குற்றாலத்தில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குற்றாலம் கூவத்தூராக மாறி இருக்கிறது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட இருக்கிறோம். இரண்டு நாட்கள் குற்றாலத்தில் தங்குவோம் என்றார். அதன் பிறகு தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் நீராட அவர்கள் பாபநாசம் புறப்பட்டு சென்றனர்.