குற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை!

 

குற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை!

சிவில், கிரிமினல் வழக்குகள் கூட இந்த பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுகின்றன. அங்கே காவல் துறைக்கு அதிக வேலை இல்லையாம்

நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் எல்லாம் தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்க நாகரீக உலகில் அமைக்கப்பட்டவைகளே. ஆனால், பண்டை காலத்தில் மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது இருந்தே தவறு செய்பவர்களுக்கு அக்குழுவில் உள்ள தலைவர்கள் தண்டனை கொடுத்து வந்தனர்.

அடுத்ததாக, ஊர் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு சக்தி அதிகமாக இருந்தது. அந்தந்த ஊர்களில் இருக்கும் கிராம தலைவர்கள் வழக்கு குறித்து விசாரித்து தண்டனை வழங்குவர். நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு என்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், ஊரில் நாட்டாம செய்பவர்கள் கூறும் தீர்ப்பே இறுதியாக இருந்தது.

vijayakumar

அந்த வகையில், மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கும் நாகாலாந்து கிராமங்களில் வில்லேஜ் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. வில்லேஜ் கவுன்சில் என்று சொல்லக்கூடிய இந்த கிராம பஞ்சாயத்துகள் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் விட அதிக அதிகாரங்கள் கொண்டதாக இருக்கிறது.

nagaland village

சிவில், கிரிமினல் வழக்குகள் கூட இந்த பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுகின்றன. அங்கே காவல் துறைக்கு அதிக வேலை இல்லையாம். ஆனால், இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஒருவர் குற்றவாளி என வில்லேஜ் கவுன்சில் தீர்மானித்து விட்டால், அவருக்கு வினோதமான தண்டனை வழங்கப்படுகிறது.

nagaland tree prison

தண்டனைக்கு உள்ளானவர்களை கிராமத்தின் முச்சந்தியில் உள்ள மரத்தால் செய்த சிறையில் அடைத்து வைக்கின்றனர் . அந்த மரச்சிறையின் கொடூரம் என்னவென்றால், அதில் உள்ள மரக்கட்டைகள் உடலில் கடுமையான அரிப்பை உண்டாக்கும் ரகமாம். உட்காரவோ, படுக்கவோ முடியாது. குற்றவாளியின் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை தானே…இப்படி தண்டனைக்கு உள்ளாபவர்கள் அடுத்த குற்றம் செய்வதற்கு கண்டிப்பாக யோசிப்பார்கள் என்பது உண்மையே..!

இதையும் வாசிங்க

திருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி!