குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு! ஏமாற்றத்தில் கண்ணீர் விட்டு அழுத நிர்பயா தாயார்…..

 

குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ஒத்திவைப்பு! ஏமாற்றத்தில் கண்ணீர் விட்டு அழுத நிர்பயா தாயார்…..

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் ஒத்திவைத்ததால், நிர்பயாவின் தாயார் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்து தண்டனை ஒத்திவைக்கப்படுவதாக நீதீமன்றம் உத்தரவு பிறப்பித்த உடன், நிர்பயாவின் தயார் ஆஷாதேவி ஏமாற்றத்தில் கலக்கம் அடைந்து கண்ணீர் விட்டு அழுததார். குற்றவாளிகளின் தூக்கு தண்டனை ரத்து செய்தது குறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திறந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் வக்கீல் ஏ.பி. சிங் என்னிடம், தூக்கிலிடப்படுவது ஒரு போதும் நடக்காது என தற்பெருமையாக கூறினார். இருப்பினும் முடிவில்லாத தைரியம் மற்றும் பொறுமை ஆகியவற்றை கொண்டு நீதிக்காக போராடுவேன். வாழ உரிமையில்லாத அந்த குற்றவாளிகளை தூக்கிலிடும் வரை நிறுத்த மாட்டேன்.

டெல்லி நீதிமன்றம்

ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். டெல்லி அரசு கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். மத்திய  அரசு கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நீதிமன்றங்களும், அரசாங்கமும் இந்த குற்றவாளிகள் முன் தலை குனிந்து கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நான் காலை 10 மணி முதல் இங்கு (நீதிமன்றத்தில்) அமர்ந்து இருக்கிறேன். நீதிமன்றம் குற்றவாளிகளை காப்பாற்ற விரும்பினால், ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்? ஏன் எங்களை இவ்வளவு நேரம் உட்கார மற்றும் நம்ப வைக்க வேண்டும்? எங்களை ஏன் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகள் பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் சிங் மற்றும் வினய் குமாரை நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தூக்கிலிட கூடாது என உத்தரவு பிறப்பித்தது.