குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து சொன்னது ஏன்? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி !

 

குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து சொன்னது ஏன்? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி !

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றே சான்று என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதற்கு தேசிய     குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றே சான்று என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ncrb

தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அதிகக் கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியலில், 1,613 கொலைகளுடன் தமிழகம் 6வது இடத்திலும், 162 கொலைகளுடன் மாநகரங்கள் பட்டியலில் சென்னை 4வது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மேற்கொள் காட்டி டிவிட்டர் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதன் பின்னராவது, தமிழகக் காவல்துறையை சுதந்திரமாகச் செயல்பட முதலமைச்சர் அனுமதிப்பாரா? என வினா எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள தகவலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என வினவி உள்ளார்.

ncrb

காவல்துறை சீர்திருத்தங்கள், காவலர் நலனுக்காக திமுக ஆட்சியில் 3 கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அதிமுக ஆட்சியில் ஒரு கமிஷன் அமைப்பதற்கே நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தல் 2017ல் 1,466 கொலை மட்டுமே நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 2017ல் 1,613 கொலைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே உண்மை தகவலை முதலமைச்சர் மறைத்து அறிக்கை வெளியிட்டிருப்பது தெரியவந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த குற்ற ஆவண காப்பகத்தின் தகவலுக்கு பின்னராவது அதிமுக அமைச்சர்களின் தலையீடு இன்றி, தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதற்கு முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்?