‘குறை சொல்லும் நேரமில்லை; தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்’: வைரமுத்து ட்வீட்!

 

‘குறை சொல்லும் நேரமில்லை; தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்’: வைரமுத்து ட்வீட்!

8 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை இன்னும் ஆழத்திற்குச் செல்லாமல் இருக்க, ஏர் லாக் மூலம் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

5 ஆண்டுகளுக்கு முன்பு 600 அடிக்கு தோண்டப்பட்டுக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் பற்றி  தான் ஒட்டுமொத்த தமிழகமே கவலை கொண்டுள்ளது.  கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்த நிலையில் 4 வது நாளாக அவனை மீட்கும் போராட்டத்தில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்களும் விடிய விடிய மீட்பு பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர். 

rik

தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை இன்னும் ஆழத்திற்குச் செல்லாமல் இருக்க, ஏர் லாக் மூலம் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  துரிதமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாறைகள் குறுக்கிடுவதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர்  பக்கத்தில், ‘அரசு எந்திரத்தையோ
ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.