குறைவாக பேசுங்க, அதிகமாக வேலை பாருங்க….. ராணுவ தளபதிக்கு காங்கிரஸ் அட்வைஸ்…

 

குறைவாக பேசுங்க, அதிகமாக வேலை பாருங்க….. ராணுவ தளபதிக்கு காங்கிரஸ் அட்வைஸ்…

குறைவாக பேசுங்க, அதிகமாக வேலை பாருங்க என நம் நாட்டின் ராணுவ தளபதிக்கு காங்கிரஸ் கட்சி அறிவுரை வழங்கியுள்ளது.

நம் நாட்டு ராணுவ தளபதி எம்.எம். நராவனே கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க உத்தரவு கிடைத்தால் ராணுவம் உடனடியாக செயலில் இறங்கும். இது அனைத்தும் மத்திய அரசு முடிவு. மத்திய அரசு விரும்பினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவினுடையதாகும் என தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக கருத்து தெரிவித்து இருந்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

இந்நிலையில், ராணுவ தளபதியின் பேச்சு குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ரஞ்சன் சவுத்ரி டிவிட்டரில், புதிய ராணுவ தளபதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக 1994ல் நாடாளுமன்றம் ஒரு மித்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு சுதந்திரம் உள்ளது மேலும் வழிநடத்தலாம்.

ராணுவ தளபதி நராவனே

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடவடிக்கை எடுக்க நீங்க விரும்பினால், முப்படையின் தலைமை தளபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேசும்படி நான் உங்களுக்கு ஆலோசனை சொல்கிறேன். குறைவாக பேசுங்க, அதிகமா வேலை பாருங்க என பதிவு செய்து இருந்தார்.