குறையும் மாணவர் சேர்க்கை: மூடப்படும் 1848 அரசுப் பள்ளிகள்?

 

குறையும் மாணவர் சேர்க்கை: மூடப்படும் 1848 அரசுப் பள்ளிகள்?

அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைந்து தான் காணப்படுகிறது. பல பள்ளிகளில் சரியான கட்டமைப்பு இல்லை.

மாணவர்கள் குறைவாகவுள்ள சுமார்  1, 848 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகள் பல தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை குறைந்து தான் காணப்படுகிறது. பல பள்ளிகளில் சரியான கட்டமைப்பு இல்லை. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து தான் வருகிறது. 

இந்நிலையில்  தமிழகத்தில்  10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 1,848 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை இணைக்கும் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் சேர்க்கை குறைவான பள்ளியிலிருந்து மாணவர்களை மாற்ற, அருகாமையில் உள்ள பள்ளிகளின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக சமீபத்தில்  நீலகிரியில்  6 பள்ளிகள் மூடும் நடவடிக்கையினை அந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது சர்ச்சையினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.