“குறைந்த வட்டியில் நகை கடன்” வேண்டுமா? முழு விவரம் உள்ளே!

 

“குறைந்த வட்டியில் நகை கடன்”  வேண்டுமா?  முழு விவரம் உள்ளே!

குறைந்த வட்டியில் நகை கடன் திட்டத்தினை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

குறைந்த வட்டியில் நகை கடன் திட்டத்தினை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

கொரோனா  வைரஸ் பரவல்  காரணமாக பொதுமக்கள் இடையே இருந்த கையிருப்பு கரைந்து பணப் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் அதிக வட்டி வசூலித்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் உடனடி கடன் தேவையை குறைந்த வட்டியில் நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் ஒரு நாள் சிறப்பு நகை கடன் எனும் புதிய திட்டத்தை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. 

f

கடன் திட்டத்தின் முக்கிய நோக்கம் குறைந்த வட்டியில் பொதுமக்களுக்கு கடன் வழங்கி அதன் வாயிலாக அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதே ஆகும்.  இந்த அளவிற்கு குறைந்த வட்டியில் ஒரு நகை கடன் திட்டத்தை இந்தியாவின் எந்த ஒரு வங்கியிலோ அல்லது வங்கி சாரா நிதி நிறுவனத்திலோ இதுகாறும் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ttt

 மேலும் இத்திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றிற்கான நகை மதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள நகைக் கடன் திட்டத்தை விட 10 சதவீத அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும். அதாவது பொதுவான நகை கடன் திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் நிலையில் இப்போதைய கடன் திட்டத்தில் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 300 வரை வழங்கப்படும்.  இதன் மூலம் பொதுமக்கள் குறைந்த வட்டியில் அதிக கடன் பெற்று பயனடையலாம் என்று தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தெரிவித்துள்ளது.