குறைந்த பட்ஜெட்டில் வெளியான தரமான தமிழ் படங்களுக்கு ரூ. 7 லட்சம் மானியம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

 

குறைந்த பட்ஜெட்டில் வெளியான தரமான தமிழ் படங்களுக்கு ரூ. 7 லட்சம் மானியம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

மூன்று ஆண்டுகளில் வெளியான படங்களில் குறைந்த செலவில்  உருவாகி வெளியான தரமான தமிழ் திரைப்படங்களுக்கு, மானியம் வழங்கப்படும்

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வெளியான தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு, மானியம் வழங்கப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது.

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு உண்டு. அதே போல் கடந்த 2015 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகளில் வெளியான படங்களில் குறைந்த செலவில்  உருவாகி வெளியான தரமான தமிழ் திரைப்படங்களுக்கு, மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான  விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தலா 7 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 

movies

முன்னதாக திரைப்படங்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று தென்னிந்திய  திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவரும் இயக்குநருமான ஆர் கே செல்வமணி நெற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.