குறைந்து வரும் சில்லரை விலை பணவீக்கம்….. கடனுக்கான வட்டியை மீண்டும் குறைக்குமா ரிசர்வ் வங்கி?….

 

குறைந்து வரும் சில்லரை விலை பணவீக்கம்….. கடனுக்கான வட்டியை மீண்டும் குறைக்குமா ரிசர்வ் வங்கி?….

தொடர்ந்து 2வது மாதமாக கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த டிசம்பரில் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.35 சதவீதமாக உயர்ந்தது. 2020 ஜனவரி மாதத்தில் சில்லரைவிலை பணவீக்கம் 68 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.59 சதவீதமாக உயர்ந்தது. கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதமாக குறைந்தது. இருப்பினும் இது நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு இலக்கான  4 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும்.

காய்கறி சந்தை

இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 5.91 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் 2019 மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 2.86 சதவீதமாக குறைந்து இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது (2020 மார்ச்) சில்லரை பணவீக்கம் உயர்ந்து இருந்தாலும், கடந்த சில மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம் குறைந்து வருகிறது.

வட்டி குறைப்பு

இதனால் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை மீண்டும் குறைப்பதற்கான வாய்ப்புகள் சிறிது உருவாகி உள்ளது. மேலும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை கையில் எடுக்கலாம். அதேசமயம் 2 வாரங்களுக்கு முன்புதான் ரெப்போ ரேட்டை (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி) 0.75 சதவீதம் குறைத்தது. இதனையடுத்து பல பொதுத்துறை வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைத்தனர்.